சவூதியில் ஜுவல்லரி கடைகளில் வெளிநாட்டினர் பணிபுரிய தடை! Featured

ரியாத்(29 நவ 2017): சவூதியில் ஜுவல்லரி கடைகளில் வெளிநாட்டினர் பணிபுரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி சவூதியில் ஜுவல்லரி கடைகள் மார்க்கெட்டுகளில் சவுதி அல்லாதவர்கள் பணிபுரிந்தால் அனைவரும் இரண்டு மாத அவகாசத்தில் அவர்களை பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த உத்தரவு அமுலுக்கு வருகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் சவூதி ஜுவல்லரி கடைகளில் கடும் சோதனை மேற்கொள்ளப்படும் அவ்வாறு யாரேனும் வெளிநாட்டினர் ஜுவல்லரிகளில் பணிபுரிந்தால் அவர்களுக்கு சவூதி ரியால் 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்கள் நாடுகடத்தப்படவும் வாய்ப்புள்ளது.

இந்த உத்தரவினால் சவூதி ஜுவல்லரி கடைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்க நேரிடும் என அறியப்படுகிறது.

Last modified on Wednesday, 29 November 2017 02:55