ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவிப்பு! Featured

வாஷிங்டன்(07 டிச 2017): ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகரான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் உரிமை கொண்டாடிவரும் நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், “இந்த முறை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கிறேன். எனக்கு முன்னால் இந்தப் பதவியில் இருந்தவர்கள், இதை செய்வதாக வாக்கு மட்டுமே அளித்தனர். ஆனால், செய்தது கிடையாது” என்றார். மேலும் ட்ரம்ப், விரைவில் அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றும் வேலைகள் துவங்கும் எனவும் அறிவித்தார்.

இதனால் இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரம் மேலும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.