Sunday, 07 January 2018 01:54

இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபாரம் நடத்திய சமூக நல்லிணக்க நிகழ்ச்சி! Featured

ரியாத்(07 ஜன 2018): இந்தியா ஃப்ரேடர்னிடி ஃபாரம் ரியாத் தமிழ் பிரிவு சார்பாக "ஈத் மிலன்" சமூக நல்லிணக்க நிகழ்ச்சி (2212-2017)அன்று இரவு 8 மணி அளவில் ரியாத் பத்தாஹ்விலுள்ள ஷிஃபா அல்ஜஸீரா ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் ஃப்ரேடர்னிட்டி ஃபாரத்தின் செயலாளர் ரம்ஜூதீன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஃப்ரேடர்னிட்டி ஃபாரத்தின் மாவட்ட தலைவர் முத்து அகமது இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ஜாலியாத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய அழைப்பாளர் மெளலவி ஷர்ஃபுதீன் இஸ்லாம் குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மத சகோதரர்களுக்கும் இஸ்லாம் குறித்த தங்களின் கேள்விகளுக்கு ஃப்ரேடர்னிட்டி ஃபத்தின் ரியாத் மண்டல செயலாளர் முகமது ராஃபி பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டதோடு நிகழ்ச்சியில் பங்கெடுத்த மாற்று மத நண்பர்களுக்கு நினைவ்வுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

ஃப்ரேடர்னிட்டி ஃபாரத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறியாளர் ரஷீத்கான் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.