குவைத் பொது மன்னிப்பு உதவி எண்கள் அறிவிப்பு! Featured

குவைத்(31 ஜன 2018): குவைத்தில் அளிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பை முன்னிட்டு இது குறித்து தொடர்புகொள்ள இந்தியன் சோஷியல் ஃபாரம் உதவி எண்களை அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் சோஷியல் ஃபாரம் குவைத் கிளை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

குவைத் உள்துறை அமைச்சகம் புதிதாக வெளியிட்டுள்ள பொது மன்னிப்பு அறிவிப்பை இந்தியன் சோஷியல் ஃபோரம் குவைத் வெகுவாக பாராட்டுகிறது.

பல்வேறு காரணங்களால் குவைத்தில் சட்ட பூர்வமற்ற முறையில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு குவைத் உள்துறை அமைச்சகம் புதிதாக வெளியிட்டுள்ள பொது மன்னிப்பு அறிவிப்பு மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வெளிநாட்டினர் அனைவரும் குறிப்பாக இந்தியர்கள் தாங்கள் குடியிருப்பை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்ள அல்லது குவைத்தை விட்டு வெளியேற இந்தியன் சோஷியல் ஃபோரம் குவைத் கோரிக்கை
விடுக்கிறது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தியதி முதல் பிப்ரவரி மாதம் 22 ஆம் தியதி வரையிலான இந்த பொது மன்னிப்பு காலத்தின் போது பயனாளிகளுக்கு உதவுவதாற்காக இந்தியன் சோஷியல் ஃபோரம் குவைத் பல்வேறு மொழிகளில் உதவிகளுக்கு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.
உதவிக்கான அழைப்புக்களை

தமிழில் 00965 991 33 474 /00965 696 26 284

ஆங்கிலத்தில் 00965 666 24 501 /00965 659 62 683

ஹிந்தியில் 00965 655 97 993 /00965 975 94 928

தெலுங்கில் 00965 975 94 928

கன்னடத்தில் 00965 99502159 /00965 65962683

மலையாளத்தில் 00965 990 83 007 / 00965 666 24 501

ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

தகவல்:

மௌலவி G. ஜாகிர் ஹுசைன் ஆலிம் ரஹீமி
செயாலாளர்
இந்தியன் சோஷியல் ஃபோரம் (தமிழ் பிரிவு) குவைத்