அபுதாபியில் இந்து கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்! Featured

அபுதாபி(11 பிப் 2018): வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் பிரதமர் மோடி ஞாயிறன்று இந்து கோவில் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபி இளவரசர் அல் நெஹாயானுடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பின்னர் , அபுதாபியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்து கோயிலுக்கு மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

அதைத் தொடர்ந்து துபாய் செல்லும் மோடி, அங்கு இந்தியர்களிடையே உரையாற்ற உள்ளார். துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்றே பிரதமர் மோடி ஓமன் செல்ல உள்ளார். .