யூ.ஏ.இ.அதிபர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்ட போலி செய்தி! Featured

அபுதாபி(13 பிப் 2018): யூ.ஏ.இ அதிபர் சேக் முஹம்மது பின் ஜைத் அல் நஹ்யான் குறித்து பொய்யான செய்தியை வெளியிட்டு இந்திய ஊடகங்கள் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ள்ன.

சில இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் சேக் முஹம்மது பின் ஜைத் அல் நஹ்யான் கலந்துகொண்டது போன்ற வீடியோவை இந்தியாவின் டைம்ஸ் நவ் சேனலும் ஜீ நியூஸ் சேனலும் வெளியிட்டது. உண்மையில் அது பொய்யான செய்தி என்றும் அதில் கலந்துகொண்டவர் உண்மையில் யாரோ ஒரு அரபிய ஊடகவியலாலரே தவிர சேக் முஹம்மது பின் ஜைத் அல் நஹ்யான் அல்ல என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் முதல் இந்து கோவிலுக்கு இந்திய பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அபுதாபியில் வாழும் இந்துக்களின் மீது மரியாதை வைத்த அபுதாபி அரசு மனித நேயத்துடன் இந்து கோவில் கட்ட இடம் அளித்து அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்தியாவுடன் நட்புப் பாராட்டி வரும் யூ.ஏ.இ இந்திய இந்து மக்களை மதித்து இந்த செயலை செய்துள்ளது.

ஆனால் இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்ட இந்திய ஊடகங்கள் மிக சாதுர்யமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை யூ.ஏ.இ ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே உள்ள நட்பை தவறாக சித்தரிக்கும் இந்திய ஊடகங்களின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் யூ.ஏ.இ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Viral video clip part of carefully-designed attempt by some groups to spread false propaganda and gain political mileage in India