ஷார்ஜாவில் 34-வது ஆண்டு சர்வதேச புத்தக கண்காட்சி! Featured

துபாய்(25 அக்.2015): "34-வது ஆண்டு சர்வதேச புத்தக கண்காட்சி அடுத்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்கி 14-ஆம் தேதி வரை ஷார்ஜாவிலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் வைத்து நடைபெறும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஷார்ஜா ஆட்சியாளர் சேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிம் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற இருக்கும் இந்த கண்காட்சியில் 64 நாடுகளை சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்பதாகவும், கண்காட்சியில் 210 மொழிகளில் 15 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த 110 புத்தக நிறுவனங்கள் உள்பட 890 உள்ளூர் மற்றும் அரபு புத்தக விற்பனையாளர்களும் கலந்துக் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சி நடைபெறுவதை அடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.