உலகம் தொட்டு அனைத்தையும் படைத்து அவற்றையெல்லாம் பாதுகாத்து வரும் தன்னிகரில்லா இறைவன் மட்டுமே உயிரினங்கள் மீது மற்றும் ஏனைய அனைத்தின் மீதும் அதிகாரமுடையவன். எந்நாட்டிலும் இல்லாத வழக்குமுறையாக என் தமிழ் நாட்டில் மட்டும் எங்கு பார்த்தாலும் ‘அதிகாரி’ என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.
தலைப்புச் செய்திகள்(07/02/2012)
வதோதரா : பாலிவுட்டின் துணிச்சலான நடிகையும் படத்தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சொல்லப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஹிட்லருக்கும் எவ்வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறையின் கையூட்டு ஒழிப்பு பிரிவினர் நேற்று இரவு முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிரடியாக நுழைந்த காவல்துறையினர், சார்பதிவாளர் அலுவலகத்தின் ஜன்னல்களை மூடி தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
இரண்டாண்டுகளுக்கு முன் கேரளா வந்து தங்கியிருக்கும் இஸ்ரேலிய தம்பதியினர் ரகசிய உளவாளிகளா? என்று மத்திய உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அவர்கள் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுவருவதால் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.
அன்னா ஹஸாரேவால் ஊழலை ஒழிக்க முடியாது : குருதாஸ் குப்தா!
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி.யின் 17-வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநாட்டில், அகில இந்தியப் பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், ஏ.ஐ.டி.யு.சி.யின் மாநிலத் தலைவர் கே. சுப்பராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உயிர்காப்பு மேலாடைகளிலும் ஊழலின் கறை!
தன்னுயிரைப் பணயம் வைத்து வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் வீரர்களுக்கு உடை வாங்கிய விவகாரத்திலும் ஊழலின் கறை காணப்படுவதாக புதிய செய்தியொன்று கிடைத்துள்ளது.
பதவி விலகினார் முஹம்மது நஷீத்!
மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத் பதவி விலகிவிட்டதாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 44 பேர் பலி!
பிலிப்பைன்ஸ் நாட்டின் 3-வது பெரிய தீவானம் நிகரோஸ் தீவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.
விஜயகாந்தின் நண்பர் இப்ராஹீம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்தார்!
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதவருமான ஜெயலலிதா முன்னிலையில், தி.மு.க. வைச் சேர்ந்த சங்கரன்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், நடிகை குயிலி உள்ளிட்டோர், தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
கலைஞர் தொலைக் காட்சிக் குழுமங்களின் தலைவராக ரமேஷ் பிரபா பொறுப்பேற்பு!
கலைஞர் தொலைக்காட்சி குழுமங்களின் தலைவராக பிரபல நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரமேஷ் பிரபா பொறுப்பேற்றுக் கொண்டதாக கலைஞர் தொலைக்காட்சி நிறுவன செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அமைச்சர் பட்டாளம் குவிப்பு!
சங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வேட்பாளரை முதன் முதலில் அறிவித்து தேர்தல் களத்தில் அதிரடியாக நுழைந்திருக்கும் அ.தி.மு.க. இப்போது தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது.
இ
ந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)
பாதுகாப்பு வேண்டும்: புதுமணத்தம்பதிகள் காவல்துறையிடம் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பதிவுத் திருமணம் செய்துக் கொண்ட புதுமணத் தம்பதிகள் காவல்துறையினரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் நாளை முதற்கட்டத் தேர்தல்
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (8.2.2012) முதல் மார்ச் 3ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இணையத்தை பயன்படுத்துபவர்களை கண்காணிக்க அமெரிக்க உளவுத்துறை நடவடிக்கை
அமெரிக்காவில் இணையக் கடைக்கு செல்பவர்களைக் கண்காணிப்பதற்கென புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையக் கடைகள் உளவுத்துறையின் ஒரு அங்கமாக இனி செயல்படும்.
மாணவர்களுக்கு கைக்கணினி (ஆகாஷ் டேப்லட்) இலவசம்: மத்திய அரசு திட்டம்
மடிக்கணினியை அடுத்து கைக்கணினி (டேப்லட்) கணினி உலகில் அதிகப் பிரபலமடைந்துவரும் நிலையில் உலகிலேயே மிகக்குறைந்த விலை கைக்கணினியை இந்தியா தயாரித்திருப்பது அறிந்ததே.
சி.பி.ஐ விசாரணையில் ராமதாஸ் சகோதரர்!
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2006-ம் ஆண்டு மே 8-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தத்தை பா.ம.க.வை சேர்ந்த சிலர் வெட்டிக் கொலை செய்தனர்.
கர்நாடக சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்!(வீடியோ)
கர்நாடக சட்டப் பேரவை குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது ஆளும் கட்சியான பா.ஜ.க அமைச்சர்கள் சூடான பலான வீடியோ பார்த்துக்கொண்டிருந்தது ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
சங்கரன்கோவிலில் திடீர் கலவரம்!
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் காந்திநகர் காளியம்மன் கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கார், ஆட்டோ, பைக் எரிந்து நாசம் ஆகின. மோதலில் காருக்கு தீவைப்பு சம்பவம் நடந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் உறவினர் ராவணன் ரூ.1 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்: நடிகர் வடிவேலு!
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கும், நடிகர் வடிவேலுவிற்கும் கார் நிறுத்துவது தொடர்பாக முன்பு பிரச்சனை ஏற்பட்டது. இது கடந்த சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது.. இதையடுத்து விஜயகாந்த்தை எதிர்க்க வடிவேலு தி.மு.க. அணியில் சேர்ந்து பிரசாரம் செய்தார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தலைப்புச் செய்திகள்(08/02/2012)
அதிகாரிகளல்ல; மக்கள் ஊழியர்!
செய்தித் துளிகள்