இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: செய்தித் துளிகள் செய்தித் துளிகள்!

செய்தித் துளிகள்!

செய்தித் துளிகள்!கர்நாடக மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா. இவர் அரசு சிறப்பு வழக்குரைஞராகவும் இருக்கிறார். இந்த நிலையில், அட்வகேட் ஜெனரல் பதவியை பி.வி.ஆச்சார்யா இன்று ராஜினாமா செய்தார். முதல்-அமைச்சரின் ஆலோசனையின் பேரில், ராஜினாமா கடிதத்தை கவர்னர் பரத்வாஜ் ஏற்றுக் கொண்டார்.

**********

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளர், எஸ்.ஆர்.கோபியின் சகோதரர் போஸ் முத்தையா இன்றிரவு (08-02-2012)) நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

**********

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான கே.ரோசய்யா இப்பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.திருமலையை நியமித்து  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

**********

மதுரையில் இரு ரவுடி கும்பல் மோதலின் காரணமக ஒருவர் உயிரிழந்தார். கடந்த 2007ல் நாகேந்திரன் கோஷ்டி, கண்ணன் என்கிற ரவுடியை கொலை செய்தது. அதற்கு பின்பு 2009ல் குண்டர் சட்டத்தில் நாகேந்திரன் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை நாகேந்திரன், மதுரை செல்லூர் பகுதியில் இருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மதுரையில் பரபரப்பு நிலவுகிறது.

**********

கர்நாடக சட்டசபைக்குள் செல்போனில் ஆபாச படம் பார்த்த பா.ஜ.க அமைச்சர்களை சட்ட சபையில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்று அன்னாஹசாரே தெரிவித்துள்ளார்.

**********

முதல் அமைச்சரின் முன்னாள் தோழி சசிகலாவின் சகோதரர். திவாகரனுக்குச் சொந்தமான கல்லூரியில் படித்து வந்த திருவாரூர் மாவட்டம் இடையூர் சரவணனின் உறவுப் பெண் ஒருவர் கடந்தாண்டு ஒருவரை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, திவாகரனும், கல்லூரி மேலாளர் ரகுநாதனும் சரவணனை கல்லூரிக்கு அழைத்து வந்து, கல்லூரியின் பெயர் கெட்டு விட்டதாகவும், அதற்கு ஈடாக ரூ. 1 லட்சம் தர வேண்டும் எனவும் கூறி மிரட்டியுள்ளனர். இது குறித்து சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் இடையூர் காவல்துறையினர் திவாகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)