இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இலங்கை

இலங்கை செய்திகள்

என்னை பதவியிலிருந்து அகற்ற வெளிநாட்டு சக்திகள் சதி - பீதியில் ராஜபக்சே!

இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவியிலிருந்து அகற்றுவதற்கு வெளிநாட்டு சக்திகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக தெரிவித்துள்ளார். கடவத்தை பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைத்தபோது ராஜபக்சே இவ்வாறு குறிப்பிட்டார்.

"ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும்" - சுப்ரமணிய சாமி

"ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும்" - சுப்ரமணிய சாமிஇலங்கையில் தமிழர்களை இனப் படுகொலை செய்த கொடூரன் ராஜபக்சேவுக்கு பாரதரத்னா வழங்கவேண்டும் என்று பரபரப்பு அரசியல்வாதியான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரியுள்ளார்.

விடுதலைப்புலிகள் செய்த அட்டூழியங்கள் - விவரணப் படம் வெளியிட்ட இலங்கை ( காணொளி இணைப்பு)

விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்களை விவரிப்பதாக கூறும் ஒரு விவரணப் படத்தை இலங்கை அரசு நேற்று (08.02.2012) வெளியிட்டுள்ளது.

சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் அபகரிக்கின்றனர் - புத்தத் துறவி குற்றச்சாட்டு

இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் அபகரிப்பதாக ஒரு வித்தியாசமான குற்றச்சாட்டை புத்தத் துறவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சனைக்கு வெளிநாட்டு பிரிவினைவாதிகள் காரணம் - ராஜபக்சே!

இலங்கை பிரச்சனைக்கு வெளிநாட்டு பிரிவினைவாதிகள் காரணம் - ராஜபக்சே!"இலங்கையின் பிரச்சனைக்கு வெளிநாட்டு பிரிவினை சக்திகளே காரணம்" என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.

ஐ.நா அமைதிப்படையில் இலங்கை போர் குற்றவாளி!

ஐ.நா அமைதிப்படையில் இலங்கை போர் குற்றவாளி!"ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் இலங்கை போர் குற்றவாளியான சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பதை நிராகரிக்க வேண்டும்" ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனிடம் அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


இது தொடர்பாக அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், கணக்கில்லாத பொதுமக்கள் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட, அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான அடிப்படைக் கொள்கைகள் மீறப்பட்டதில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா முக்கிய பாத்திரம் வகித்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதாபிமான நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் இதனைக் கூறியுள்ள போதும், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இந்தப்போரில் போர்க்குற்றங்களும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்ட இந்த அறிக்கையில் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58 வது டிவிசன் இந்தக் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டதாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு நியமிக்கப்படும் ஒருவரது தலைமைத்துவ ஆற்றலும், குற்றச்சாட்டுகளற்ற அப்பழுக்கற்ற தன்மையும் தகைமைகளாக கருதப்பட வேண்டும்.

சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கான அவரது நியமனம் உலகத்துக்கு திகைப்பூட்டும் செய்தியாக அமையும்.

எனவே ஐ.நா பொதுசெயலர் பான் கீ மூன், சவேந்திர சில்வாவின் இந்த நியமனத்தை நிராகரிக்க வேண்டும் அல்லது அவரது நியமனத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்."

மேற்கண்டவாறு அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு சிறையில் கலவரம்!

இலங்கை சிறையில் கலவரம்!கொழும்புவில் உள்ள சிறையொன்றில் இன்று நடைபெற்ற கலவரத்தில் அதிகாரிகள் உட்பட பலர் பலத்த காயமடைந்தனர்.

இலங்கை சிறையிலிருந்து 73 விடுதலைப்புலிகள் விடுதலை!

விடுதலை புலிகள் விடுதலைகடந்த 2009 ஆண்டு மே மாதம் நடந்த விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை ராணுவத்திற்கும் நடந்த இறுதிப் போரில் சுமார் 11,000க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர்.

தப்லீக் ஜமாஅத்தை சார்ந்தவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற உத்தரவு

இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு இஸ்லாம் குறித்த போதனைகளை நடத்துவதற்கு வந்த 161 வெளிநாட்டு முஸ்லிம்களை, விசா விதிமுறைகளை மீறியதாக கூறி நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை குடியகல்வு கட்டுப்பாடகம்  உத்தரவு பிரப்பித்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறுங்கள் - இஸ்லாமிய அமைப்பினருக்கு இலங்கை உத்தரவு

இலங்கையில் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதக்குழுவினரை இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா விரைவில் விடுதலை?

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போரை முன்னின்று நடத்திய இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குமிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டதை விசாரிக்காத இந்தியா - இலங்கை அமைச்சர் குற்றச்சாற்று!

"காஷ்மீரில் 9000 மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது சம்பந்தமாக விசாரணைக்கு உடன்படாத இந்தியாவுக்கு இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறி விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்பதற்கு எந்தவித அருகதையும் இல்லை" என இலங்கை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் ஆதரவாளர்கள்மீது தொடரும் தாக்குதல்!

ரணிலுடன் றியாஸ்இனந்தெரியாத ஆயுதக் குண்டர்களால் வேட்பாளர் பற்றிய தகவலை அறியத் தரும்படி கோரி அவரது ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகம் வந்த ராஜபக்சே மைத்துனருக்குத் தர்ம அடி!

தமிழகத்திலுள்ள ராமேஸ்வர‌‌ம் கோ‌யிலு‌க்குத் த‌ரிசன‌ம் செ‌ய்ய வ‌ந்த இல‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்சேவி‌ன் த‌ங்கை கணவரை மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்தனர்.

நீர்க்கொழும்புவில் பரவும் டெங்கு

இலங்கையில் உள்ள நீர்க்கொழும்பு நகரத்தில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2011 ஆம் வருடம் சிகிச்சைக்கு வந்திருந்த 711 பேர்களில் 201 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதில் 125 பேர் சிறுவர்கள் ஆவர்.

இலங்கை அமைச்சர் கருணாவின் புத்தாண்டுக் குத்தாட்டம்!

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் வெளியேறி ராஜபக்சே கட்சியில் இணைந்து அமைச்சரானவர் கருணா.

மீண்டும் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம்?

வன்னியில் இடம்பெயரும் மக்களை முன்னிலைப் படுத்தி ஒரு அமைப்பை ஏற்படுத்தி மீண்டும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஈடுபட்டுள்ளதாக  இராணுவப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

திருகோணமலையில் குடியுரிமைச் சான்றிதழ் நடமாடும் சேவை!

இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் சென்றிருந்தவர்களுக்கு அங்கு பிறந்த குழந்தைகளுக்கு, இலங்கை குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்கும் விதமாக இரண்டு நாள் நடமாடும் சேவை திருகோணமலையில் நடக்கிறது.

மாலத்தீவு அதிபர் இலங்கை வருகை

மாலத்தீவு அதிபர் முஹம்மத் நஸீத் அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கை சென்றுள்ளார்.

ரணில் மீண்டும் எதிர்கட்சி தலைவரானார்

ரணில் மீண்டும் எதிர்கட்சி தலைவரானார்ஐக்கிய தேசிய கட்சி இலங்கையில் எதிர்கட்சியாக உள்ளது. அக்கட்சியின் தலைவர் தேர்வில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு 72   ஓட்டுகளும், ஜெயசூர்யாவுக்கு 24 ஓட்டுகளும் கிடைத்தன.

வேட்பாளருக்கு ஆளும் கட்சியினர் கொலைமிரட்டல்!

ஆளும் கட்சியினர் கொலைமிரட்டல்கடந்த பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் தொழிலதிபருமான இலங்கை அக்கரைபற்றைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் அர்சாத் என்பவருக்குத் தேர்தலின் போது ஆளும் கட்சியின் ஆயுதக் குண்டர்களினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டன. அதனையடுத்து அவர் தலைமறைவார்.

Page 1 of 2