விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போரை முன்னின்று நடத்திய இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குமிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே அவரை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர் மிகப்பெருமளவிலான போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ள நிலையில், இலங்கை சுதந்திர தினத்தன்று பொன்சேகா நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படலாம் என்று ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொன்சேகா விடுதலை செய்யப்படும் சூழல் நிலவுவதால் அதுவரை எந்தவொரு போராட்டத்தையும் நடத்தக் கூடாது என்று பொன்சேகா ஆதரவாளர்களிடம் டிரான் அலஸ் கோரியுள்ளார்.
வரும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி வரையில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தாது அமைதியை கடைபிடிக்குமாறு டிரான் அலஸ், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரியுள்ளார்.
இலங்கை சுதந்திர தினத்தன்று பொன்சேகா நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படாவிட்டால், மறுதினமே நாடுதழுவிய போராட்டங்களை பெருமளவில் நடத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா விரைவில் விடுதலை?