இனந்தெரியாத ஆயுதக் குண்டர்களால் வேட்பாளர் பற்றிய தகவலை அறியத் தரும்படி கோரி அவரது ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐ.க.தேசிய கட்சியின் ஆதரவோடும் சுயேட்சை குழு 1 சார்பாக போட்டியிட்ட முன்னாள் வேட்பாளரும் Global Modern Institute நிறுவனத்தின் உரிமையாளருமான முகம்மட் றியாஸ் என்பருக்குத் தேர்தலில் பக்க பலமாக இருந்து செயலபபட்ட அவரது ஆதரவாளர் நௌசாத் எனபவர் மீது இனந்தெரியாத ஆயுதக்குண்டர்குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக பாலமுனை மருத்துவமனையில் நௌசாத் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
நேற்று மாலை பாலமுனை பிரதேசத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஆளும்கட்சி அட்டாளைச்சேனையில் தோல்வியைத் தழுவியிருந்தன.
பிரதேசபையை ஆளும் கட்சி வெற்றி கொள்ள முடியாமை போனதற்கு ஐ.க.தேசிய கட்சியின் ஆதரவோடும் சுயட்சை குழு 1 சார்பாக போட்டியிட்ட முகம்மட் றியாஸ் என்பவரின் பிரச்சாரங்களே தோல்விக்குக் காரணமாக அமைந்தன. தேர்தலின்போது அவருக்கு மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. அதனைத் தொடந்து அவர் அஞ்சி தலைமறைவாக உள்ளபோதிலும் அவரைப் பழிவாங்கும் நோக்கில் அவர் பற்றிய தகவலைக் கூறும்படி கோரி றியாஸின் ஆதரவாளர் நௌசாத் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னரும் அந்த ஆயுதக் குண்டர் குழுக்கள் அட்டாளைச்சேனை பகுதிக்குச் சென்று அவருடைய ஆதரவாளர் ஒருவரை அச்சுறுத்தி தாக்கிய சம்பவம் நினைவூட்டத்தக்கது.
- பாலமுனை செய்தியாளர் அகமட்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
வேட்பாளர் ஆதரவாளர்கள்மீது தொடரும் தாக்குதல்!