பாடசாலை மாணவர்கள் சிலரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகச் சொல்லப்படும் அப்பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதுடைய இந்த ஆசிரியர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். தனது பாடசாலையின் எட்டு மாணவர்களை இவர் கடுமையான முறையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ள விடயம் தற்போது வெளிவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இலங்கையின் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பாடசாலையில் கடந்த நான்கு வருடஙக்ளாக விளையாட்டுத் துறை ஆசிரியராக இவர் கடமையாற்றி வருகின்றார். அப்பாடசாலையில் எட்டாம் ஒன்பதாம் வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்களையே இவர் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கரப்பந்தாட்ட போட்டிக்காக அழைத்துச் செல்வதாக மாணவர்களின் பெற்றோர்களிடம் கூறி மாணவர்கள் சிலரை அழைத்துச் சென்றுள்ள இவர் அம்மாணவர்களை கதிர்காமம் பிரதேச சுற்றுலா விடுதி ஒன்றில் தங்க வைத்து பாலியல் துஷபிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். பாடசாலை நேரத்திலும் கூட இவர் விளையாட்டு பயிற்சி அறையில் மாணவர்களுக்கு நீளப்படங்களைக் காண்பித்து அவர்களை துஷபிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆசிரியரின் செயல்களிலிருந்து தப்புவதற்காக ஒரு மாணவர் நடந்த சம்பவங்களை தனது பெற்றோருக்குத் தெரிவித்ததையடுத்து அவர்கள் இந்த ஆசிரியர் பற்றி பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். இதனையடுத்தே இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது