இலங்கையில் உள்ள நீர்க்கொழும்பு நகரத்தில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.கடந்த 2011 ஆம் வருடம் சிகிச்சைக்கு வந்திருந்த 711 பேர்களில் 201 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதில் 125 பேர் சிறுவர்கள் ஆவர். தற்போது ஏறத்தாழ 50 பேர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டு ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளான்.
நீர்க்கொழும்பு நகரத்தில் உள்ள உடையார் தோப்பு, லாஸரஸ் வீதி, தெஹிவத்தை, நெடுவல்வத்த, தம்மிட்ட வீதி,சூரண ஆகிய இடங்களில் அதிக மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
நீர்க்கொழும்புவில் பரவும் டெங்கு