இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவியிலிருந்து அகற்றுவதற்கு வெளிநாட்டு சக்திகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக தெரிவித்துள்ளார். கடவத்தை பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைத்தபோது ராஜபக்சே இவ்வாறு குறிப்பிட்டார்.
யார் என்ன சூழ்ச்சி செய்தாலும் தமக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றிய பிறகே பதவியிலிருந்து விலகுவேன் என்றும் தெரிவித்தார். மேலும்,எரிபொருள் விலையேற்றம் குறித்து குழப்பமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ள ராஜபக்சே,சர்வதேச சந்தைநிலை அடிப்படையில், எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு அதற்கான மானியங்கள் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார். ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பில் ராஜபக்சே அரசுமீது சர்வதேச அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில் ராஜபக்சேயின் இந்தப் பேச்சு, அவர் பீதியிலிருப்பதைக் காட்டுகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
என்னை பதவியிலிருந்து அகற்ற வெளிநாட்டு சக்திகள் சதி - பீதியில் ராஜபக்சே!