கடந்த பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் தொழிலதிபருமான இலங்கை அக்கரைபற்றைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் அர்சாத் என்பவருக்குத் தேர்தலின் போது ஆளும் கட்சியின் ஆயுதக் குண்டர்களினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டன. அதனையடுத்து அவர் தலைமறைவார்.
ஆளும் கட்சியினரின் மிரட்டலுக்குப் பயந்து இதுவரை தலைமறைவாக இருந்து வரும் அப்துல் ஜப்பாரைக் கொலை செய்யும் நோக்கில் இப்போதுவரை தேடி வருகின்றனர். கடந்த 18/12/2011 அன்று அந்த ஆயுதக் குண்டர்கள் அப்துல் ஜப்பாரைக் கொலை செய்யும் முயற்சியில் மீண்டும் தேடிவருவதாகவும் தேர்தலின் போது வேட்பாளருக்குப் பக்க பலமாக இருந்து செயல்பட்டவரான இர்பான் என்பவரிடம் வேட்பாளர் அப்துல் ஜப்பார் அர்சாத் இருக்கும் இடத்தைத் தெரியபடுத்துமாறு கோரி இர்ஃபானைத் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. "அப்துல் ஜப்பாரை எப்போதும் எங்குயிருந்தாலும் நாங்கள் ஒரு கணக்கு பார்ப்போம்" என இர்ஃபானிடம் கூறிவிட்டுசென்றுள்ளதாக இர்ஃபான் கூறியுள்ளார்.
- அக்கரைபற்று செய்தியாளர் S. பழில்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
வேட்பாளருக்கு ஆளும் கட்சியினர் கொலைமிரட்டல்!