தமிழகத்திலுள்ள ராமேஸ்வரம் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை கணவரை மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்தனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை கணவர் நடேசன் தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்வதற்காக தமிழகத்திலுள்ள ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தார்ர். இது பற்றி தகவல் அறிந்த மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் ராமேஸ்வரம் கோயிலை முற்றுகையிட்டனர்.
தமிழர்களைக் கொடூரமாக கொன்றொழித்த ராஜபக்சேவின் மைத்துனர் உடனடியாக ராமேஸ்வரம் கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என்று கோசமிட்ட அவர்கள், நடேசனைச் சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்தனர்.
இத்தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து, நடேசனையும் அவர் குடும்பத்தினரையும் மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை கணவருக்குத் தமிழகத்தில் விழுந்த தர்ம அடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தமிழகம் வந்த ராஜபக்சே மைத்துனருக்குத் தர்ம அடி!
Comments
This is worst than SL army.
LTTE needs to be destroyed... that was the aim of all sri lankans..
It doesn't matter whether he is a LTTE or its supporters.
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed