இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இலங்கை இலங்கை பிரச்சனைக்கு வெளிநாட்டு பிரிவினைவாதிகள் காரணம் - ராஜபக்சே!

இலங்கை பிரச்சனைக்கு வெளிநாட்டு பிரிவினைவாதிகள் காரணம் - ராஜபக்சே!

இலங்கை பிரச்சனைக்கு வெளிநாட்டு பிரிவினைவாதிகள் காரணம் - ராஜபக்சே!"இலங்கையின் பிரச்சனைக்கு வெளிநாட்டு பிரிவினை சக்திகளே காரணம்" என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கையின் 64 வது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

"இலங்கையில் 50 வருடங்களாக கிடைக்காத சுதந்திரத்தை மூன்று வருடங்களில் பெற்றுக்கொடுத்துள்ளோம். இலங்கையின் பிரச்னைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகளே காரணம். அந்த பிரிவினைவாதிகளிடம் இருந்தே இலங்கையில் பிரச்னைகளை ஏற்படுத்துபவர்களுக்கு நீரும், எண்ணெயும் கிடைக்கிறது.

இலங்கை நாட்டின் குறிப்பிட்ட பிரதேசம் ஒரு இனத்திற்குச் சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இலங்கை நாடு அனைத்து இனத்திற்கும் சொந்தமானது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

இலங்கையின் பிரச்னைகளுக்கு வெளிநாடுகளின் தீர்வு திட்டங்கள் தேவையில்லை. வெளிநாட்டு தீர்வு ஒன்று இலங்கையில் திணிக்கப்படுமானால் அது, ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்தக்கூடியதாக அமைந்துவிடும். இதனை கருத்திற்கொண்டே நாடாளுமன்ற தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய பிரச்னைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு மாத்திரமே உண்டு. இந்த நாடாளுமன்ற தேர்வுக்குழுவில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தேசிய பிரச்னைக்கு தீர்வு காண்பது அனைத்து கட்சிகளின் பெரிய பொறுப்பாகும்."

மேற்கண்டவாறு ராஜபக்சே பேசினார்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: