இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இலங்கை சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் அபகரிக்கின்றனர் - புத்தத் துறவி குற்றச்சாட்டு

சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் அபகரிக்கின்றனர் - புத்தத் துறவி குற்றச்சாட்டு

இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் அபகரிப்பதாக ஒரு வித்தியாசமான குற்றச்சாட்டை புத்தத் துறவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பைச் சார்ந்த புத்தத் துறவி அம்பிட்டிய சுமன தேரோ என்பவரே இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இந்த அபகரிப்புக்கு எதிராக ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 14 ஆம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் இந்தத் துறவி ”புத்தக் கோவில்களை பாதுகாக்க முறையான நடவடிக்கைகள் ஏதும் மட்டக்களப்பில் எடுக்கப்படவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் 18 புத்தக் கோவில்கள் இருந்தும் அதில் நான்கில் மட்டுமே துறவிகள் இருப்பதாகவும் அவர்களும் கடுமையான சிரமங்களுக்கிடையில் அங்கு இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ”துறவிகளுக்கு அங்கு யாரும் உணவு வழங்குவதில்லை” என்றும் அம்பிட்டிய சுமன தேரோ கூறினார். அரசு இந்தப் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Comments  

 
0 # Mahesh 2012-02-09 14:26
Good Joke........................................... Haaaaaaaaaaaaaaaaaaaaa
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: