விடுதலைப் புலிகள் முன்னாள் தளபதி கைது! Featured

கொழும்பு(29 நவ 2016): விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மன், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய பிறகு ராசபட்சவுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய அரசு வாகனத்தை திருப்பி அளிக்காதது மற்றும் வாகனம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளிக்குமாறு நிதித்துறை குற்றவியல் புலனாய்வு அமைப்பு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து ஊழல் புகாரின் விசாரணைக்காக ஆஜராக வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

Vinayagamurthi Muralitharan, better known as Karuna, who was the former deputy leader of the LTTE, was arrested on Tuesday for alleged financial irregularities during the previous Mahinda Rajapaksa regime.

Muralitharan alias Karuna, who was also a minister in the previous government, was asked to appear before the Financial Crimes Investigation Department (FCID) this morning to record a statement on the alleged misuse of a government vehicles.

Last modified on Tuesday, 29 November 2016 17:03