Friday, 02 December 2016 12:30

இலங்கை அதிபருடன் அமெரிக்க துணை அதிபர் ஆலோசனை! Featured

கொழும்பு(02 டிச 2016): இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுடன் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கவுள்ள மைக் பென்ஸ் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

நேற்று மாலை இருவரும் நடத்திய ஆலோசனையில் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தியதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் மற்றும் அந்நாட்டின் வருங்கால துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோருக்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா வாழ்த்து தெரிவித்ததாகவும், அமெரிக்காவுக்கு வரும்படி மைத்ரிபாலா சிறிசேனாவுக்கு மைக் பென்ஸ் அழைப்பு விடுத்ததாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மைத்ரிபாலா சிறிசேனா, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு நடத்திவரும் இலங்கை அரசின் மீதான போர்க்குற்ற விசாரணையை கைவிடும்படி வலியுறுத்துமாறு அமெரிக்காவின் வருங்கால அதிபர் டிரம்ப்புக்கு கடிதம் எழுதப்போவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Friday, 02 December 2016 12:24

Related items

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.