மாணவர்களை செல்ஃபோனில் நிர்வாணமாக வீடியோ எடுத்தவர்கள் கைது! Featured

கொழும்பு(02 மார்ச் 2017): பயிற்சி முகாமில் இருந்த 6 மாணவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்த மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரன்டெபே கெடட் என்னும் பயிற்சியில் ஈடுபட்ட 6 மாணவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்த மூன்று மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களின் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். மேலும் குறித்த வீடியோவையும் தலைமை ஆசிரியர் பார்வையிட்டதன் அடிப்படையில் வீடியோ எடுத்த மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்பு மஹியங்கனை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஒரு லட்சம் ரூபாய் பினையில் விடுவிக்கப்பட்டனர்.

Last modified on Thursday, 02 March 2017 09:48