ரஜினி சொந்த பணத்தில் வீடுகட்டி தரட்டும்: இலங்கை கலைஞர்கள்! Featured

கொழும்பு(28 மார்ச் 2017): நடிகர் ரஜினிகாந்த் தனது சொந்த பணத்தில் வீடுகட்டி ஈழத்து மக்களுக்கு தர இலங்கை வரட்டும் என்று ஈழத்து கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் இலங்கை செல்ல இருந்தார். ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இதனை அரசியலாக்க வேண்டாம் என்று ரஜினியும் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே இலங்கையில் ஒரு சில இடங்களில் ரஜினிக்கு ஆதரவாக போராட்டங்களும் நடைபெற்றன. ஆனால் அது லைக்கா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப் பட்ட போராட்டம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஈழத்து கலைஞர்கள் தெரிவிக்கையில், “ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பணத்தில் ஈழத்து மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்துவிட்டு, அதனை திறந்து வைக்க வரட்டும்” என்றனர்.

Last modified on Tuesday, 28 March 2017 10:01