எய்ட்ஸ் பாதித்ததாக கூறி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவி தேர்வில் முதலிடம்! Featured

கொழும்பு(12 ஏப் 2017): இலங்கையில் எய்ட்ஸ் பாதித்ததாக கூறி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவி ஒருவர் தனியாக படித்து முதலிடம் பிடித்துள்ளார்.

இலஙகை க்னேமுல்லேயை சேர்ந்த மாணவி ஒருவர் அதே ஊரில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தார். ஆனால் அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உள்ளதாக கூறி பள்ளியிலிருந்து வெளியேற்றப் பட்டார்.

எனினும் தனியாக வீட்டில் இருந்தபடியே பயின்று தவணை முறையில் தேர்வெழுதி முதலிடம் பிடித்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த மாணவியை பள்ளியிலிருந்து வெளியேற்றுமாரு சக மாணவிகளின் பெற்றோர் அழுத்தம் கொடுத்ததாலேயே அவர் பள்ளியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் அமர்வதாலோ. அல்லது தொடுவதாலோ எய்ட்ஸ் பரவாது என்று பல விழிப்புணர்வு கொடுத்தும் பலர் இதனை நம்பாமல் இருப்பது வருந்தத்தக்க விசயமாகும்.

Last modified on Wednesday, 12 April 2017 01:40