நடு இரவில் மோடிக்கு நன்றி தெரிவித்த ராஜபக்‌ஷே! Featured

கொழும்பு(13 மே 2017): பிரதமர் மோடியும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவும் நடுஇரவில் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் மோடி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் சந்தித்துப் பேசினார்.

அப்போது கடந்த காலத்தில் தமது ஆட்சியிலும் அதேபோல் தற்போதய ஆட்சியிலும் அரசாங்கத்தின் இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அதேபோல இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையிலும் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும் தொடர்ந்தும் அமைய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

மேலும் இதுகுறித்து இலங்கையின் தொழில்களில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் பங்களிப்புகள் வரவேற்க்கத்தக்கது. கடந்த ஆட்சியில் இந்தியாவின் நிதி உதவியில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையிலும் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும் தொடர்ந்தும் அமைய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

மேலும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இச்சந்திப்பு குறித்து தெரிவிக்கையில், "இலங்கையின் தொழில்களில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் பங்களிப்புகள் வரவேற்க்கத்தக்கது. கடந்த ஆட்சியில் இந்தியாவின் நிதி உதவியில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மிகவும் நெருக்கடியான கால சூழலில் எமக்கு இந்த சந்திப்புகளை இந்திய தூதரகம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. எனவே இந்த சந்திப்பு மிகவும் ஆரோக்கியமான வகையில் அமைந்தது என்று பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Rajapaksa's talks with Modi was a very cordial discussion and he was happy with India-Lanka cooperation over the years.