இலங்கை மழை வெள்ளத்துக்கு 146 பேர் பலி! Featured

கொழும்பு(29 மே 2017): இலங்கையில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் 146 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பெய்த வரலாறு காணாத மழையில் இதுவரை 146 பேர் பலியாகியிருப்பதாகவும் 112 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் வீடுகளை இழந்துள்ளனர்.

கடந்த 2003க்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த மழை வெள்ளத்தினால் இதுவரை 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவிலிருந்து மருத்துவக் குழு ஒன்று விரைந்துள்ளது.

More bodies under mudslides on Sunday pulled out by rescuers and the death toll reached to 146 with 112 others go missing in Sri Lanka.