Friday, 09 June 2017 14:55

முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்த ராணுவ அதிகாரி: வீடியோ ஆதாரம்! Featured

கொழும்பு(09 ஜூன் 20170: இலங்கை மஹரகம மற்றும் விஜேரம பகுதிகளில் முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்த முன்னாள் ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த மே மாதம் மஹரகம ஹைலெவல் வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கும், அதேமாதம் விஜேராமவில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கும், ஜனில் விஜேராமவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மற்றும் நேற்று முன் தினம் மஹரகமையில் அமைந்துள்ள மற்றும் ஒரு வர்த்த நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இரவு நேரங்களில் தீ வைக்கப்பட ஒரு கடையின் சிசிடிவி வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட விசரணைக்குப் பிறகு அவர் தீ வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

தீ வைக்கப்பட்ட முஸ்லிம் கடைகளில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related items

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.