ஜெர்மனியில் தமிழ் பெண் படுகொலை! Featured

ஜெர்மனி(16 ஆகஸ்ட் 2017): ஜெர்மனியில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியில் குடியேறியுள்ள சோபிக்கா பரமநாதன் என்ற மாணவி நைஜீரியாவை சேர்ந்த 28 வயது ஆண்டனி என்பவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டனிக்கும் தன்னார்வ தொண்டு புரிந்து வந்த சோபிக்காவுக்கும் ஏற்கனவே நட்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிணக்கு காரணமாக சோபிக்காவை கண்டதுண்டமாக வெட்டி சூட்கேசில் வைத்திருந்ததாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆண்டனி சோபிக்காவை கொலை செய்துவிட்டு ஜெர்மனியை விட்டு தப்பியோடிய நிலையில், சுவிச்சர்லாந்தில் வைத்து ஆண்டனி கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே ஆண்டனியின் உண்மையான பெயர் வேறு என்றும் அவர் போலியான பெயரில் ஜெர்மனியில் குடியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஆண்டனியின் உண்மையான பெயரை வெளியிட போலீஸ் மறுத்துவிட்டது.

நீதிமன்றத்தில் இந்த கொலை குறித்து எதுவும் தெரிவிக்காத ஆண்டனிக்கு இந்த கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என தெரிகிறது.

இலங்கை மக்கள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த சோபிக்கா இலங்கையிலிருந்து தனது பெற்றோருடன் ஜெர்மனியில் அகதியாக குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.