இலங்கையில் ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்! Featured

கொழும்பு(11 செப் 2017): இலங்கையில் ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை கட்டட நிர்மாண பரிசோதனை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ரத்னபுரி, கேகாலை , நுவரெலியா, காலி, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20 பிரதேசங்களில் இந்த மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 700 குடும்பங்கள் வரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.