Wednesday, 25 October 2017 19:18

எய்ட்ஸ் நோய்க்கு மூன்று பேர் பலி! Featured

யாழ்ப்பானம்(25 அக் 2017): இலங்கை யாழ்ப்பானத்தில் எய்ட்ஸ் நோய்க்கு மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து பாலியல் நோய் தடுப்பு மருத்துவர் தாரணி குருபரன் கூறுகையில், "யாழில் இவ்வாண்டு 6 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதாகவும் அதில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு 39 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளர். மீதமுள்ளோர், யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related items

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.