Tuesday, 09 January 2018 11:04

நடிகையை படுக்கைக்கு அழைத்த முன்னாள் அதிபரின் நண்பர்! Featured

கொழும்பு(09 ஜன 2018): இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் நண்பர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதில் ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட நடிகை மதுசா ராமசிங்கே விரும்பியுள்ளார். இது தொடர்பாக மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரிடம் நடிகை மதுசா உதவி கேட்டிருக்கிறார், ராஜபக்சேவின் நண்பரோ, தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில் நடிகை மதுசா படுக்கையறையில் நிர்வாணமாக நிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையொன்றிற்கு மதுஷா அளித்துள்ள பேட்டியில் மதுசா மேலும் தெரிவித்ததாவது: "ராஜபக்சேவின் கட்சிக்காக நான் உழைத்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து ராஜபக்சேவின் நண்பரிடம் உதவி கேட்டால் அவர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார். இதுகுறித்து ராஜகபக்சேவிடம் புகார் அளித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related items

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.