இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே அணி வெற்றி! Featured

கொழும்பு(11 பிப் 2018): இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள 24 நகராட்சி கவுன்சில்கள், 41 ஊரக கவுன்சில்கள், 275 பிரதேசிய சபாக்கள் என பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இதில் முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி அல்லது இலங்கை மக்கள் முன்னணி, அதிபர் சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்பு, விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை போட்டியிட்டன.

இந்த தேர்தலுக்கான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. அதில் முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா(எஸ்எல்பிபி) கட்சி 51 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக ராஜபக்சேயின் கட்சி 45 சதவீத இடங்களையும், . விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி 10 இடங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களையும் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

​The Sri Lanka Podujana Peramuna (​SLPP or ​Sri Lanka People’s Front), backed by former President Mahinda Rajapaksa, is poised for a landslide victory in the ​country's ​February 10 local government polls.