முகநூலில் கூறிவிட்டு வாலிபர் தற்கொலை! Featured

கொழும்பூ (13-07-16): இலங்கையை சேர்ந்த வாலிபர் தான் தற்கொலை செய்யப்போவதாக முகநூலில் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இலங்கையின் பொல்காவல பகுதியில் கடந்த 9 ஆம் தேதி வாலிபர் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன் நண்பர்களிடம் நான் இன்றுடன் எனது முகநூல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று பதிவேற்றிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவனது நண்பர்கள் வட்டாரத்தில் அவனது தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது காதலியை சந்திக்க சென்றதாகவும், திரும்பி வந்த அவன் இந்த தவறான முடிவை எடுத்ததாகவும் அவனது நண்பர்கள் தெரிவித்தனர். மேலும், அவனது காதலிக்கு அவளது பெற்றோர்கள் வேறொரு இடத்தில் திருமணத்தை நிச்சயித்திருந்ததாகவும் இதனால் அவன் மிகவும் மன இறுக்கத்தோடு காணப்பட்டதாகவும் அவனது நண்பர்கள் தெரிவித்தனர்.