தமிழக சட்டப்பேரவையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அ.தி.மு..க. உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன், தி.மு..க உறுப்பினர் கோ.வி.செழியன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ,
"திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மொத்தம் 10 கலைக்கல்லூரிகள்தான் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் 2 மாத காலத்திலேயே 11 கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன .
ஸ்ரீரங்கம் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை நாவலூர்குட்டபட்டு, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நிரந்தரமாக தொடங்க இடம் தேர்வு செய்யப்பட்டு நிலமாற்றப் பணிகள் தொடர்பான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது.
ஆண்டிப்பட்டி கலைக் கல்லூரியில் போதிய வசதிகள் இல்லாதது தொடர்பாகவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாகவும் அரசு பரிசீலித்து வருகிறது என்றார்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
5 ஆண்டுகளில் 10 கல்லூரி, 2 மாதத்தில் 11 கல்லூரி: அமைச்சர் பழனியப்பன் தகவல்