இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம்

தமிழக செய்திகள்

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஆதரவு தருமா காங்கிரஸ்?

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞான தேசிகன் தெரிவித்துள்ளார்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவைக் குறை கூற தகுதி இல்லை!

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவைக் குறை கூற தகுதி இல்லை!மதுரை ஆதீனம் பதவிக்கு நித்யானந்தா தகுதியானவர் தான் என்றும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டுள்ள ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவைக் குறை கூறும் தகுதி இல்லை என்று அகில பாரத அனுமன் சேனா நிறுவனத் தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

புத்தரின் புனிதப் பொருட்களை அனுப்புவது தமிழர்களைப் புண்படுத்தும் - வைகோ!

புத்தரின் புனிதப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவது உலகெங்கும் வாழும் தமிழர்களைப் புண்படுத்தும் செயல் என்றும் புத்தரின் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லாத மகிந்த ராஜபக்சே அரசுக்கு புத்தரின் பொருட்களை அனுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

ரூ 43 .4 லட்சம் - யாருடைய சொத்து மதிப்பு?

புதுக்கோட்டைத் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் ஜாகீர் உசேன் தனக்கு ரூ 7.80 லட்சத்துக்கு அசையும் சொத்துக்களும் ரூ 15 லட்சத்துக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக தம் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

நீர் தர மறுக்கும் கர்நாடகம் - ஜெ பிரதமருக்கு கடிதம்

 

கர்நாடக அரசு தமிழகத்துக்கு மாதாமாதம் தர வேண்டிய நீரை திறந்து விடாமல் இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சோ உடல்நலக்குறைவு- முதல்வர் நேரில் சந்தித்தார்

பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமியை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

நித்தியானந்தா பீடங்களில் ரகசிய போலீஸ் விசாரணை!

Nithi under CBCID Enquiryநடிகையுடன் உறவு, ஆதினப் பதவி பெற  கோடிக்கணக்கில் பணம் கொடுத்தது ஆகியவற்றால் சர்ச்சையில் சிக்கியுள்ள சாமியார் நித்தியானந்தாவின் பீடங்களில் ரகசிய காவல் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சவூதி செல்ல வந்த பெண்ணின் பாஸ்போர்ட் தொலைந்து மீண்டது



Passport lost and found of a muslim lady towards saudiசவூதி அரேபியாவுக்கு பணிநிமித்தம் பயணமாக இருந்த பெண்ணின் கடவுச்சீட்டு தொடர்வண்டி நிலையத்தில் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

சொந்த கட்சியிலேயே ஆதரவில்லாத சங்மா!

சொந்த கட்சியிலேயே ஆதரவில்லாத சங்மா!குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ சங்மாவை  அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடு மறந்து சங்மாவை ஆதரிக்க வேண்டும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

மணல் மாபியாக்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை!


சட்ட விரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும் அவர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.



தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் ''எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பின் அடிப்படையில், உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அளவற்ற முறையில் மணல் எடுப்பதைத் தடுக்கும் வகையிலும், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி, நியாயமான விலையில், முறையாக
மணல் கிடைக்க வழிவகை செய்யும் வகையிலும், மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் வகையிலும், அரசே மணலை எடுத்து விற்பனை செய்வது என முடிவு
எடுக்கப்பட்டது.  இதன் காரணமாக பொது மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைத்து வந்ததுடன் நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும் வகையில் மணல் அள்ளும்
பணி முறைபடுத்தப்பட்டது.

2006-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, வரைமுறையின்றி மணல் அள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆற்றுப் படுகைகள் அனைத்தும்
பாழ்படுத்தப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு  மணல் அள்ளக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு
தாமிரபரணி ஆற்றுப் படுகை சேதமடைந்து இருந்தது.  

நான் மீண்டும் மூன்றாவது முறையாக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மணல் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட
நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டேன்.  எனது உத்தரவினையடுத்து, வருவாய் துறையும், காவல் துறையும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் தீவிர சோதனைகளை  மேற்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

கடந்த ஓராண்டு காலத்தில், மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது  4,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் தொடர்புடைய  5,033 பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.  5,501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதுவரை 12 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 கோடி
ரூபாய் அளவுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவது மற்றும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது
ஆகியவை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில்  603 கோடி ரூபாயாக, அதாவது சராசரியாக
ஆண்டொன்றிற்கு  120 கோடி ரூபாயாக இருந்த மணல் வருவாய், கடந்த ஓராண்டில், தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்காத சூழ்நிலையிலும்,  197 கோடி ரூபாயாக
உயர்ந்துள்ளது. இதிலிருந்தே மணல் கொள்ளை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். 

இருப்பினும், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அள்ளுவது தொடர்வதாகவும், அதைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.   உதாரணமாக,  12.5.2012 அன்று திருப்பத்தூர் வட்டம், பணியாண்ட பள்ளி, மதுரா ஜெயபுரம் கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக கிராமத்திலிருந்து திருப்பத்தூர் சார் ஆட்சியருக்கு தொலைபேசி செய்தி வரப் பெற்றது. இதைத் தடுத்து நிறுத்தும் வண்ணம், கிராம உதவியாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் அங்கே அனுப்பி வைக்கப்பட்டார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம உதவியாளர் பிற்பகல்  3.30 மணியளவில் அந்தக் கிராமத்தில் உள்ள வாரி புறம்போக்கில் அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த டிராக்டர் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது, மணல் ஏற்றிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோட முயற்சித்து இருக்கிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்திய போது, வாகன உரிமையாளர் திரு. திருப்பதி மற்றும் ஐந்து நபர்கள் கிராம உதவியாளர்   திரு. ராஜேந்திரனை சாதியின் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி, கடுமையாக தாக்கி, அவரை இழுத்துச் சென்று வாரிக் கரையின் மேடான பகுதியில் கழுத்தை நெறித்து கொல்ல முயன்றுள்ளனர். மேலும், அவ்விடத்தில் குழி பறித்து அவரை புதைக்கவும் முயன்றுள்ளனர். அப்போது,  திரு. ராஜேந்திரன் தன் உயிரைக் காப்பாற்ற முயற்சித்த போது, அப்பகுதியில் குப்பைக் கொட்டுவதற்காக வந்த 12 வயது சிறுமி இதனை நேரடியாகப் பார்த்து, பயந்து உரத்தக் குரலில் கத்தியுள்ளார்.  இதனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். 

இதனைக் கண்ட மணல் கடத்தல்காரர்கள், டிராக்டரில் இருந்த மணலை அங்கே கொட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அம்மணாங்கோயில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மணல் கடத்தல்காரர்கள் கொண்டு வந்திருந்த இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றி, கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக, கந்திலி காவல் நிலையத்தில், திரு. திருப்பதி மற்றும் ஐந்து நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  திரு. சேகர் என்பவர் இது தொடர்பாக
கைது செய்யப்பட்டுள்ளார். திரு. திருப்பதி மற்றும் திரு. கோவிந்தராஜன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இவர்களை போலீஸ் காவலில்
எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மீதமுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். 
மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் இயற்கையின் வரப்பிரசாதமான ஆற்றுப் படுகைகளை சமூக விரோதிகள் தங்கள் சுய
லாபத்திற்காக சேதப்படுத்துவதை எனது தலைமையிலான அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதையும், சட்டவிரோதமாக மணல் கடத்துவோர்  யாராக
இருந்தாலும், அவர்களை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

 

நித்யானந்தாவுக்கு அதிமுக ஆதரவா?

அதிமுக ஆதரவுடனேயே மதுரை ஆதீனமாக நியமிக்கப் பட்டேன் என மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை!

திமுக ஆட்சியில் வருவாய் மற்றும்  வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியின் வீட்டிலும் , மகன் மற்றும் மகளின் வீடுகளிலும், லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேற்று காலை சோதனை நடத்தினர்.

சென்னையில் கடும் வெயில் கொளுத்துகிறது

 

சென்னையில் கடும் வெயில் கொளுத்துகிறதுஅக்னி வெயில் எனப்படும் கடும் வெயில் காரணமாக சென்னை உட்பட தமிழகமெங்கும் கடும் வெயில் கொளுத்துகிறது. . சென்னை மீனம்பாக்கத்தில் 109 அளவு ஃபாரன்ஹீட் நுங்கம்பாக்கத்தில் 107 ஃபாரன்ஹீட் அளவும் நேற்று பதிவாகி இருந்தது.

"நித்தியை கைது செய்" - இ. ம.க

நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் சர்ச்சையில் சிக்கிய நித்யானந்தாவை மதுரை மட இளைய ஆதீனமாக நியமித்ததற்கு பல்வேறு ஆதீனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலை அறிந்ததே.

கோழி மேய்ந்த தகராறில் சிறுகுழந்தை கழுத்தை நெரித்துக் கொலை

கோழி மேய்ந்த  தகராறில் சிறுகுழந்தை கழுத்தை நெரித்துக் கொலைபக்கத்து வீட்டில் சென்று கோழி மேய்ந்ததால் ஏற்பட்ட தகராறில் அந்தப் பக்கத்துவீட்டுப்பெண் கோழிக்குரியவரின் கைக்குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று போட்ட கொடூரம் விழுப்புரம் மாவட்டத்தில் சம்பவித்துள்ளது.

பெண்ணுடன் மடத்தை விட்டு ஓடியதை நினைவில் கொள்ளட்டும் - அருணகிரி நாதர்!

பெண்ணுடன் மடத்தை விட்டு ஓடியதை  நினைவில்  கொள்ளட்டும்  -  அருணகிரி நாதர்!

மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப் பட்டதற்கு மடாதிபதிகள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இன வெறியைத் தூண்டும் வகையில் பேச்சு: காடுவெட்டி குரு மீது வழக்குப் பதிவு

இன வெறியைத் தூண்டும் வகையில் பேச்சு: காடுவெட்டி குரு மீது வழக்குப் பதிவுவன்னிய இளைஞர் பேரவை கடந்த 5ம் தேதி மகாபலிபுரத்தில் நடத்திய விழாவில் சாதிப் பிரிவினையைத் தூண்டும் வகையில் மைய, மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசியதாக வன்னியர் சங்கத் தலைவரும், பாமக பிரமுகருமான சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு மீது மகாபலிபுரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஜெயலலிதாவின் காலில் விழும் படத்தால் பிரபல பத்திரிக்கையாளர் நீக்கம்

 

விகடன் குழுமத்திலிருந்து மதன் விலக்கம்ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட இதழ்களை வெளியிட்டு வரும் விகடன் குழுமத்திலிருந்து அதன் முன்னாள் இணை ஆசிரியரான மதன் விலக்கப்பட்டுள்ளார்.

ராமஜெயம் மனைவி பொய்யான தகவல் அளித்தாரா? போலீசார் சந்தேகம்!

ராமஜெயம் மனைவி பொய்யான தகவல் அளித்தாரா? போலீசார் சந்தேகம்!முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மார்ச் 29 அன்று மர்ம நபர்களால் கடத்தப் பட்டு கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார்.

அதிரடிச் சோதனை- அதிர்ச்சியில் வீரபாண்டி ஆறுமுகம்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வீடுகள்,மகள் வீடு, உதவியாளர் வீடு,  கல்லூரி, தொழில் நிறுவனங்கள் என தமிழகம் முழுவதும் 16 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக திருமங்கலம் பார்முலா,அதிமுக சங்கரன்கோவில் பார்முலா - ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திமுக வின் திருமங்கலம் பார்முலாவாக இருந்தாலும், அதிமுக வின் சங்கரன்கோவில் பார்முலாவாக இருந்தாலும் அதனை மார்க்சிஸ்ட் கட்சி ஜனநாயக ரீதியாக எதிர்த்து நிற்கும் என அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

கூடுதல் செய்திகள்...

Page 2 of 51