இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம்

தமிழக செய்திகள்

" கென்டக்கி கர்னல் " மு.க. ஸ்டாலின்!

அமெரிக்க அமைப்பு ஒன்று முன்னாளில் அந்நாளும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு "தங்கத் தாரகை" விருது அளித்திருந்தது. அவ்வகையில்  அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய ‘‘கென்டக்கி கர்னல் விருது’ திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்படுகிறது.

இந்தியாவை ஜெயலலிதா ஆளும் காலம் விரைவில் வரும் : அமைச்சர் ஆரூடம்!

இந்தியாவை ஜெயலலிதா ஆளும் காலம் விரைவில் வரும் : அமைச்சர் சி.வி.சண்முகம் ஆருடம்விழுப்புரம் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக முதல் - அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 64-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.

கொல்லப்பட்டவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப் பட்டது

சென்னையை உலுக்கிய வங்கி கொள்ளையர்கள் 5 பேர் வேளச்சேரியில் காவல்துறையினரால் என்கவுன்டர் மூலம் கொல்லப் பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் புதிய மசூதி!

கடலூர் மாவட்டத்தில் புதிய மசூதி!கடலூர் மாவட்டம்,  சிதம்பரம் – கடலூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பி.முட்லூர் ஆணையங்குப்பத்தில் மஸ்ஜிதே முஹம்மத் என்னும் புதிய மசூதி திறப்புவிழா நேற்று முன் தினம் நடைபெற்றது.

இந்தியாவிலிருந்து மட்டுமல்ல உலகிலிருந்தே போலியோவை விரட்டுவோம்: பிரதமர்

டெல்லியில் “போலியோ மாநாடு 2012'- என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது, இம்மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத்,  பாகிஸ்தான் அமைச்சர் ஹசார் கான் பிஜ்ரானி, நேபாள சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்திர மகாடோ, இலங்கை சுகாதார துணை அமைச்சர் லலித் திஸநாயகா, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்கள் சுதீப் பந்தோபாத்யாய, எஸ்.காந்திசெல்வன், ரோட்டரி சங்க சர்வதேச தலைவர் கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அல்ஹஸா நகர தமுமுக முன்னாள் நிர்வாகியின் மகன் மரணம்

சவுதி அரேபியா கிழக்கு மாகாணம் அல் ஹஸா நகர  தமுமுக முன்னாள் பொருளாளரும், அல்ஹாஜிரி வாகன உதிரி விற்பனையகத்தின் மேலாளருமான நயீமுல்லாஹ்-வின்  மகனான ஸுப்யான் நேற்று காலை சென்னையில் உயிரிழந்தார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக ராமகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மீண்டும் ஜி.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மின் தடை காரணமாக அமில மது குடித்தவர் பரிதாப மரணம்!

மின் தடை காரணமாக அமில மது குடித்தவர் பரிதாப மரணம்!வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பழனிபேட்டையை சேர்ந்தவர் 53 வயதான வஜ்ரவேலு. இவருக்கு அம்சா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

என்கவுண்டர் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

சென்னையில் உள்ள வேளச்சேரியில் கடந்த 23 ஆம் திகதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் வங்கிக் கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குடிகாரர்களின் வசதிக்காக காலை 9 மணிக்கே டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவு

டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்துவதுதான் நடைமுறையில் உள்ளது. இப்போது காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை கூடுதலாக 2 மணி நேரம் கடைகளை திறக்க வேண்டும் என்று தமிழக அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.எஸ்.தியாகராஜன்,பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்,

புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி முதல்வருக்கு சீமான் வேண்டுகோள்

விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசு விதித்துள தடையை நீக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மின்வெட்டு எதிரொலி - பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்

தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே தமிழகத்தில் மின்வெட்டு கடுமையாக இருப்பதற்கு காரணம் என ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். மின்வெட்டினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு, ஜெனரேட்டர்களை பள்ளிகளுக்கு வாடகைக்கு பெற்று வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு :

22 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை

தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கூடங்குளம் போராட்டத்திற்கு முதல்வர் ஆதரவானவர்

தமிழகத்தின் மின்பற்றாக்குறையை சமாளிக்க அனல்மின் நிலையம் அமைப்பது, மாற்று எரிசக்தித் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வலியுறுத்தியது போன்ற முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மூலம் அவர் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப்போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதையே காட்டுகிறது.

சங்கரன்கோவில்: திமுக வேட்பாளர் மாற்றப்படுகிறார்

சங்கரன்கோவில்: திமுக வேட்பாளர் மாற்றப்படுகிறார்சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் மாற்றப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. புதிய வேட்பாளராக  நகராட்சியில்  திமுக உறுப்பினராக உள்ள சங்கர் அறிவிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

கூடங்குளம் போராட்டக்காரர்களை கொச்சை படுத்திய பிரதமர்மீது வழக்கு தொடருவேன் - உதயகுமார்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக, நாட்டிலுள்ள சிந்திக்கும் திறன் மிகுந்த மக்கள் கூடங்குளம் அணு மின் திட்டத்தின் அவசியத்தை உணர்ந்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல்: கோவில்பட்டியில் 'மினி' அமைச்சரவை

தமிழக அரசியல் கட்சிகள் தங்களது இழந்த பலத்தைப் பரிசீலனை செய்யவும் ஆளுங்கட்சிக்கு பொதுமக்களின் ஆதரவு எந்தளவு உள்ளது என்பதை அறியும் களமாக சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கருதப்படுகிறது. அதிமுக வேட்பாளராக முத்துச்செல்வி போட்டியிடுகிறார்.

இடைத்தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்!

இடைத்தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்!அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறும் இருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியும் தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து - இ.யூ.மு.லீ கோரிக்கை!

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து - இ.யூ.மு.லீ கோரிக்கை!"தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும்" என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் சங்கமிக்கும் சங்கரன்கோவில்

அனைத்துக் கட்சித் தலைவர்கள் சங்கமிக்கும் சங்கரன்கோவில்இடைத்தேர்தலையொட்டி அனைத்துக்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளனர் சங்கரன்கோவில் தொகுதி மக்கள். சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது.

ஜெயலலிதாவுக்காக அங்கப்பிரதட்சணம் செய்த அதிமுக நிர்வாகி!

ஜெயலலிதாவுக்காக அங்கப்பிரதட்சணம் செய்த அதிமுக நிர்வாகி!கரூர் : முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் அதிமுக பிரமுகர் செந்தில்நாதன் அங்கப்பிரதட்சணம் செய்தார்.

கூடுதல் செய்திகள்...

Page 25 of 51