இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம்

தமிழக செய்திகள்

ஊழல் அரசியல்வாதிகளின் பாஸ்போர்ட்டை முடக்குவார்களா? - உதயகுமார்

கூடங்குளம் பகுதி மக்களின் வேண்டுகோளின்படி அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூகப் போராளி சுப.உதயக்குமாருடைய பாஸ்போர்ட் முடக்கப் பட்டுள்ளது. உதயக்குமார் மீது தேச விரோத வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புனையப்பட்டுள்ள நிலையில் மதுரை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட் மீது நடவடிக்கை எடுத்தனர்.

கடும் காய்ச்சலால் பெண் மரணம் - கடையநல்லூரில் பரபரப்பு

Woman dies creates panic in townதிருநெல்வேலி மாவட்டம் கடைய நல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SSLC - பிட் அடிக்க உதவிய தலைமை ஆசிரியர் மீது கிரிமினல் வழக்கு

Criminal case against HM, teachers for irregularity in SSLC Exam
தமிழகமெங்கும் எஸ் எஸ் எல் சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் பார்த்து எழுத உதவியதாக, அப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 10 பேர் மீது குற்றவியல் வழக்கு தொடர மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆணையிட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா சசிகலா சார்பில் மேலும் ஒரு மனு

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையை  தாமதப்படுத்த பல்வேறு முயற்சிகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தம்பி ஸ்டாலின் புறக்கணிப்பு - அண்ணன் அழகிரியின் ஆதரவாளர்களுக்கு திமுக நோட்டீஸ்!

திமுக பொருளாளர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நேர்காணல் நடத்தி  இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார்.

14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மதுரையில் ஸ்டாலின் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணலை நடத்தினார். மதுரையில் ஸ்டாலின் பங்கேற்ற பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இரு நிகழ்ச்சிகளிலும் அழகிரியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை. அழகிரியின் உத்தரவுப் படியே அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலின் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்ததால் அழகிரியின் ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகள் 14 பேருக்கு திமுக தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் திமுக பொருளாளர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்துள்ளீர்கள். உங்களை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது. இது குறித்து ஏழு நாட்களுக்குள் தலைமைக் கழகத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல் கட்சி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்மாவை மறு விசாரணை செய்ய ஜெயேந்திரர் எதிர்ப்பு!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை மிரட்டலுக்குப் பயந்து பிறழ் சாட்சி சொன்னதாகவும் தங்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சங்கரராமனின் மனைவி பத்மா மற்றும் அவரது மகன் ஆகியோர் புதுவை நீதிமன்றத்தில் மனுச் செய்து இருந்தனர்.

"எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை?" - விஜயகாந்த்தை கிண்டலடித்த அதிமுக

 

தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவரும் நடிகருமான விஜயகாந்த்தை கிண்டலடித்து அதிமுக உறுப்பினர் வெங்கடாசலம் பேசினார்.

தமிழ் ஈழத்திற்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : கருணாநிதி

 

சென்னை : இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக தனி ஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை தாம் வரவேற்பதாக கூறிய திமுக தலைவர் கருணாநிதி இந்தியா இதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவலர் குடியிருப்பில் இளம்பெண் மரணம் - கொலையா? தற்கொலையா?

 

காவலர் குடியிருப்பில் இளம்பெண் மரணம் - கொலையா? தற்கொலையா?கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சிறப்புக் காவல்படை தலைமைக் காவலரின் மனைவி தூக்கில் தொங்கி இறந்ததால், கொலையா தற்கொலையா என்று காவல்துறை விசாரித்துவருகின்றனர்.

புதுக் கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? - டாக்டர் ராமதாஸ்

 

புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடாது என்று கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

கமிசன் அரசு நீடிக்கலாமா? திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

மயிலை மான்கொல்லையில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி கமிசன் வாங்கும் அரசு நீடிக்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.

சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவர் ஜெயலலிதா - கருணாநிதி குற்றச்சாட்டு

அதிமுக அரசின் பால்விலை உயர்வு, மின்கட்டண மற்றும் பச கட்டண உயர்வு, போன்ற  மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்க பகுதிச் செயலாளர் தா.வேலு முன்னிலை வகித்தார்.

சங்கரராமன் கொலை வழக்கில் பத்மாவை   மீண்டும் விசாரிக்க ஆட்சேபனை இல்லை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் அவரது மனைவி பத்மா மற்றும் அவரது மகன் ஆனந்தை மீண்டும் விசாரிக்க தமிழக அரசுக்கு ஆட்சேபம் இல்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

அமைச்சரின் உறவினர் கொலைவழக்கு: ராமதாஸ் தம்பிக்கு ஜாமீன்

அமைச்சர் சிவி சண்முகம் உறவினரைக் கொன்ற வழக்கில் பாமக நிறுவனரான ராமதாஸின் தம்பி சீனு கவுண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அதிமுக அரசு மீது கனிமொழி கடும் தாக்கு!

 

அதிமுக அரசு மீது கனிமொழி கடும் தாக்கு!தமிழக அரசின் மின்கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து திமுக சார்பில் திருவொற்றியூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி கனிமொழி ஜெயலலிதா சாமானிய மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டினார்.

அதிமுக வழியில் திமுக - எம்.பி க்கள் குழுவில் பங்கேற்காது!

எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பி க்கள் குழு நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு அங்கு தமிழர்களின் மறுவாழ்வு குறித்த நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளது.

மகன் உயிரோடு எரிப்பு - தந்தை கைது

Father arrested for burning son aliveமனநிலை பாதித்த மகனை உயிரோடு தீவைத்துக் கொளுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம்: SSLC தேர்வில் மதிப்பெண்னுக்கு பதிலாக கிரேடு முறை !


Tamilnadu introduces grade system in SSLCபள்ளி இறுதிப் பொதுத் தேர்வு நிலைகளைப் பொருத்த அளவில்,  தமிழகக் கல்வி முறைமையில் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

செவிலியர் பிரச்சனையில் முதல்வர் தலையிட தா.பாண்டியன் கோரிக்கை

ஊதிய உயர்வு மற்றும் வேலை நேரத்தை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை செவிலியர் நலச் சங்கத்தினர், வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர். இதில் 400 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மீனவர்களிடையே கோஷ்டி மோதல்! 13 பேர் கைது!

மாமல்லபுரம் மீனவர் பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து நிர்வாகி புஷ்பலிங்கம்(45) கடந்த மார்ச் மாதம் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு 5 பேரைக் கைது செய்தனர்.

போலீசார் தாக்கியதால் தலித் வாலிபர் தற்கொலை - ராமநாதபுரத்தில் பதட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் செட்டியார் தெருவில் வசித்து வருபவர் சேது. இவர் தலித் சமூதாயத்தை சேர்ந்தவர். இவருக்கும் அடுத்த வீட்டுக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து புகார் கொடுக்கச் சென்ற தலித் வாலிபரை போலீசார் அடித்து உதைத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Page 9 of 51