கோவை பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் 2020-க்கான தொழில்நுட்ப பார்வை என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி தில் நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் நந்தகோபால் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
"நமது இந்திய தேசத்தின் வளர்ச்சி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது மாணவர்கள் படித்துக் கொண்டே நிறைய பணிகளை செய்ய வேண்டும். அதுவே உங்களது லட்சியமாக இருக்க வேண்டும். அதற்கு உரிய எண்ணத்தை வளர்த்துக் கொண்டு பாடுபட வேண்டும்.
கடுமையான உழைப்பால் மட்டுமே எடிசன், ரைட் சகோதரர்கள், சர்.சி.வி.ராமன், சி.ராமானுஜம், ஐன்ஸ்டீன் ஆகியோர்களால் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைப் போல் மாணவர்கள் திறமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். வாழ்வில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு அதற்கு ஏற்றவாறு கடுமையாக உழைக்க வேண்டும்.
படிக்கும் போதே மாணவர்கள் கிராமங்களுக்கு சென்று படிக்க வசதி இல்லாதவர்களை கண்டறிந்து இலவசமாக கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். என்னால் முடியும், நம்மால் முடியும், என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்.
முன்னேற்றத்துக்கான சிந்தனையே மாணவர்களின் முதல் செல்வம். மாணவர்களாகிய நீங்கள் அறிவு வளர்ச்சியோடு உரிய இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்.. எனவே அறிவாற்றல் மிகுந்த செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்."
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தேசத்தின் வளர்ச்சி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது: அப்துல் கலாம்!
Comments
முயற்சி யிடுவதே காரியமாய் - செயலாடும்
வயலாக குறைவற்ற செல்வமாக அறிவுசார்
வியப்புகளை விளைத்திடு வோம்வா!
- மதுக்கூர் என்.எஸ்.எம்.ஷாகுல் ஹமீது
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed