தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து திருச்சி, சேலம், உளுந்தூர்பேட்டை, கடலூர், வேலூர், தஞ்சை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாமகவினர் இன்று மின்வெட்டைக் கண்டித்து தீப்பந்தம், லாந்தர் விளக்குகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “மின்வெட்டால் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் மின்வெட்டை சரிசெய்வோம் என்று அதிமுக கூறியது. ஆனால் 8 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மின்வெட்டு நேரம் 8 மணி நேரத்திலிருந்து, 10 மணி நேரமாக அதிகரித்துள்ளது.
மின்வெட்டை சரி செய்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியிடம் பல்வேறு ஆலோசனைகள் உள்ளன. ஆனால் நாங்கள் கூறினால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை
மின்வெட்டை சரிசெய்யாமல் இத்தனை நாட்களாக தன்னுடன் இருந்தவர்களை கைது செய்து மக்களை திசைதிருப்புகின்றனர் என்றார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
நாங்கள் ஆலோசனை சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை: ராமதாஸ் ஆதங்கம்
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed