இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் மீண்டும் வங்கி கொள்ளை: சென்னையில் பரபரப்பு

மீண்டும் வங்கி கொள்ளை: சென்னையில் பரபரப்பு

சென்னை பெருங்குடி ராஜீவ் காந்தி சாலையில் 'பேங்க் ஆப் பரோடா' வங்கி கிளையில் கடந்த மாதம் 23ந் தேதி ரூ 24 லட்சம்கொள்ளை போனது. இந்த கொள்ளையர்கள் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சென்னையை அடுத்த கீழ்க்கட்டளைப் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இன்று மதியம் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சுமார் ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காரில் வந்து இறங்கிய 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி வங்கிக் காசாளரை மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது. அவர்கள் கொள்ளையடித்த பணம் ரூ.13 லட்சம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. கொள்ளைப்போன பணம் குறித்து இதுவரை தெளிவான தகவல் கிடைக்கவில்லை

கொள்ளையடித்த பணத்துடன், கொள்ளை கும்பல் காரில் தப்பியோடிவிட்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: