இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் சி.பி.ஐ விசாரணையில் ராமதாஸ் சகோதரர்!

சி.பி.ஐ விசாரணையில் ராமதாஸ் சகோதரர்!

சி.பி.ஐ விசாரணையில் ராமதாஸ் சகோதரர்!தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2006-ம் ஆண்டு மே 8-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தத்தை பா.ம.க.வை சேர்ந்த சிலர் வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரது மகன் மருத்துவர் அன்புமணி, தம்பி சீனிவாச கவுண்டர் உட்பட 22 பேர் மீது திண்டிவனம் ரோசனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதையடுத்து டாக்டர் ராமதாசின் தம்பி சீனிவாச கவுண்டர், உறவினர் கருணாநிதி உள்பட 10 பேரை கடந்த மாதம் சி.பி.ஐ. கைது செய்தது.

இதை தொடர்ந்து சீனிவாச கவுண்டர், கருணாநிதி ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி செங்கல்பட்டு செசன்சு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது.

ஆனால் கருணாநிதியை மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சீனிவாச கவுண்டரை விசாரிக்க அனுமதி வழங்கவில்லை. 

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதி மதிவாணன் இன்று விசாரித்தார். பின்னர் சீனிவாச கவுண்டரை 1 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: