இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் சங்கரன்கோவிலில் திடீர் கலவரம்!

சங்கரன்கோவிலில் திடீர் கலவரம்!

சங்கரன்கோவிலில் திடீர் கலவரம்!திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் காந்திநகர் காளியம்மன் கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.  இரு தரப்பினரும் பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கார், ஆட்டோ, பைக் எரிந்து நாசம் ஆகின.  மோதலில் காருக்கு தீவைப்பு சம்பவம் நடந்தது.

கலவரத்தை அடுத்து சங்கரகோவிலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேயந்தர்பிதாரி  தலைமையிலான காவல்துறையின் அதிரடிப்படை கண்ணீர்புகை வீசி கும்பலை விரட்டியது.

இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் சிலர் காயமடைந்ததாக காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும்,  பதற்றம் இன்னமும் நீடிக்கிறது.

Comments  

 
+2 # Abdul Kader 2012-02-08 19:27
கீழுள்ள செய்தியையும் இணைத்து வெளியிட்டிருக்கலாமே..

" ஊர்வலத்தில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. மேலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தாக்குதலில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கேட்டு கொள்கிறது"
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Rafeek 2012-02-08 19:56
[ஃஉஒடெ நமெ="ஆப்டுல் கடெர்"]கீழுள்ள செய்தியையும் இணைத்து வெளியிட்டிருக்கலாமே..

" ஊர்வலத்தில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. மேலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தாக்குதலில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கேட்டு கொள்கிறது"[/ஃஉஒடெ]
தமிழ் நாடோ இந்தியாவோ பாதிக்கப்பட்ட சிறுபான்மயினருக்கு நீதி கிடைத்ததாக சரித்திரம் இல்லவே இல்லை.
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: