இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் கடலூர் மாவட்ட ஆட்சியர் கார் மோதி இருவர் படுகாயம்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் கார் மோதி இருவர் படுகாயம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேற்று மாலை சென்னை புறப்பட்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கார் மோதி இரு கட்டட தொழிலாளிகள் படுகாயமடைந்தனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, நேற்று மதியம் 2.30 மணிக்கு, காரில் கடலூர் ஆல்பேட்டை அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் கார் மோதியது. அதில், மோட்டார் சைக்கிளில் வந்த கட்டடத் தொழிலாளிகளான பன்னீர்செல்வம், ; குணா, , ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிள் மோதியதில், ஆட்சியர்  சென்ற காரின் முன்பகுதியின் இடதுபக்கம் நொறுங்கியது. ஆட்சியரின் குழந்தை சாரு,  லேசான காயங்களுடன் தப்பினார்.

உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்த கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, படுகாயமடைந்த கட்டட தொழிலாளர்களை தனது காரிலேயே ஏற்றி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆட்சியர்  ராஜேந்திர ரத்னூ, தனது குடும்பத்தினரை ஆட்டோவில் ஆட்சியரின் முகாம் அலுவலத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து, விபத்தில் சிக்கிய இருவருக்கும் அளித்த சிகிச்சை குறித்து, டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், இருவரையும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இரு கட்டடத் தொழிலாளிகளும் குடிபோதையில் இருந்ததாக தெரிய வருகிறது.

 

Comments  

 
0 # farook 2012-02-07 13:53
மகனை காலெஜ் அலைத்து பொகும் போதுன்னு பார்தென்
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: