இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் சங்கரன் கோவில்: திமுகவுக்கு காங்கிரஸ் வலிய ஆதரவு!

சங்கரன் கோவில்: திமுகவுக்கு காங்கிரஸ் வலிய ஆதரவு!

சங்கரன் கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக, மதிமுக, திமுக ஆகிய கட்சிகள் போட்டியிடப்போவதாக, வேட்பாளர்களை அறிவித்துள்ளன. முதல்வர் ஜெயலலிதாவால் சீண்டிவிடப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தனது கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார்..

இந்நிலையில் ,சங்கரன்கோவில் தனி தொகுதியில் போட்டியிடும் ஜவகர் சூரியக்குமாரை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கும் என்று தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் அறிவித்துள்ளார்

திமுக வேட்பாளரான ஜவகர் சூரியக்குமார்  காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த அருணாச்சலத்தின் அண்ணன் மகன் ஆவார். இதனை முன்னிட்டு சூரியக்குமாருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது இந்த ஆதரவை வலியக்க வந்து தந்துள்ளது காங்கிரஸ் என்பது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரிய அலைகளை தோற்றுவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றி விட்டது திமுக. இந்த நிலையில் திமுக ஆதரவு கேட்காத நிலையில் தானாகவே முன்வந்து ஆதரவளிப்பதாக ஞானதேசிகன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஞானதேசிகனின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ்ஸில் வேறுயாரும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: