தமிழக அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றிய எஸ்.பி.வேலுமணி பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக பணியாற்றிய அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டனர்.
முசிறி தொகுதி எம்.எல்.ஏ. ஆன என்.ஆர்.சிவபதி பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராகவும், செய்யார் தொகுதி எம்.எல்.ஏ. ஆன முக்கூர் என்.சுப்பிரமணியன் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
பதவி ஏற்பு விழா, தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று மாலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்றது. அமைச்சர்களாக என்.ஆர்.சிவபதி முதலிலும், இதைத்தொடர்ந்து முக்கூர் என்.சுப்பிரமணியனும் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பின்னர் ஆளுநர் ரோசைய்யா, முதல் அமைச்சர் ஜெயலலிதா, மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் ஒன்றாக அமர்ந்து படம் எடுத்துக்கொண்டனர்.
முசிறி தொகுதி எம்.எல்.ஏ. ஆன என்.ஆர்.சிவபதி அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அமைச்சராக நியமிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் என்.ஆர்.சிவபதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு