திருவாரூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் சசிகலாவின் தம்பி திவாகரன் மீது அளித்துள்ள வீடு இடிப்பு, கொலை மிரட்டல் புகாரின் அடிப்படையில் திவாகரனை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடிவரும் நிலையில் திவாகரனின் மனைவி ஹேமலதாவிற்கு காவல் துறையிலிருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
மனைவி ஹேமலதா மற்றும் மகன், மகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் இன்று மாலை 5 மணி்க்குள் முன்னிலை ஆகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பாணையினை ஹேமலதா பெற்றுக் கொண்டார். எனினும் மகன், மகள் இருவரும் ஊரில் இல்லாததால் ஹேமலதா மட்டும் நீடாமங்கலம் காவல்நிலையத்தில் முன்னிலை ஆவார் என்று தெரிகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
திவாகரன் மனைவி காவல் நிலையத்தில் முன்னிலை ஆக அழைப்பாணை