தமிழக சட்டப்பேரவைஉரிமை மீறல் குழுக்கூட்டத்தில், பேரவையில் நேற்று தேமுதிகவினர் நடந்து கொண்ட விதம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த முடிவின்படி, 'இந்தக் கூட்டத்தொடர் மற்றும் அடுத்து வரும் கூட்டத்தொடர் சேர்த்து மொத்தம் 10 நாட்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழியுடன் கூடிய நிபந்தனையுடன் மற்ற தேமுதிக உறுப்பினர்கள் சபைக்கு அனுமதிக்கப்படுவர்,' என சபாநாயகர் கூறினார்.
இதற்கு, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "உரிமைக் குழுவின் தீர்ப்பு சர்வாதிகாரமானது. எதிர்கட்சிகளின் கருத்துகள் கூற மறுக்கப்பட்டு வருகிறது," என்று விஜயகாந்த் சஸ்பெண்டுக்கு கண்டனம் தெரிவித்தார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
விஜயகாந்துக்கு ஆதரவாக தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளிநடப்பு