விழுப்புரம் அருகேயுள்ள வேலியம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவர், அடையாளம் தெரியாத மர்மக்கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ளது வேலியம்பாக்கம் ஊராட்சி மன்றம். இதன் தலைவராக திமுகவைச் சேர்ந்த சங்கரதாஸ் என்பவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கோலியனூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.
சங்கரதாஸ் விழுப்புரத்திலிருந்து வேலியம்பாக்கத்துக்கு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது, ஜானகிராமன் ரயில்வே மேம்பாலத்தின் அருகே அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்றால் வழிமறித்து சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்தது.
இக்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
ஊராட்சிமன்ற திமுக தலைவர் வெட்டிக்கொலை!