நேற்று முன்தினம் கூடிய தி.மு.க.பொதுக்குழு மூலம் கட்சி நிர்வாக கட்டமைப்பில் மாநில அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அம்முயற்சி பொதுக்குழுவில் ஏற்பட்ட சலசலப்புகளின் காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் திமுகவின் 14-வது உள்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, இன்று முதல் தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை தொடங்குகிறது. இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், “"ஜனநாயக முறைப்படி உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் முடிந்து, வார்டு கிளைகள் தொடங்கி, தலைமைக்கழக நிர்வாகிகள் வரை ஆறு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். 95 ஆயிரம் கிளைக் கழகங்களையும், ஒரு கோடியே 10 லட்சம் உறுப்பினர்களையும் கொண்டது திமுக. எனவே ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணி நடைபெறும். உறுப்பினர் கட்டணம் ரூ.10. உறுப்பினர் சேர்க்கைப் படிவத்துக்கான கட்டணப் படிவம் ரூ.25 என்று அதில் கூறப்பட்டுள்ளது
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரம்