பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
சங்க காலத்தில் இளைஞர்கள் போருக்கு சென்றார்கள். இப்போது பாருக்கு செல்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள்.
எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவர வலியுறுத்தி வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் மதுஒழிப்பு போராட்டம் நடைபெறும். பா.ம.க. பொதுக்குழுவை கூட்டி விவாதித்து அதுபற்றி அறிவிப்போம்.
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் தானே புயலால் சுமார் 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்தன. ஆனால் தமிழக அரசு தலா ரூ.1 லட்சம் செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதாக அறிவித்துள்ளது. தரமான வீடுகள் கட்டுவதற்கு ரூ 2 லட்சம் தேவைப்படும். எனவே ரூ.2 லட்சம் செலவில் ஒவ்வொரு வீட்டையும் கட்டித்தர அரசு முன் வர வேண்டும்.
தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கல்வி கட்டணத்தை அரசு முழுமையாக ஏற்க வேண்டும்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் சென்ற ஆண்டு ரூ.1,298 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதில் ஒருமாத லாபத்தொகையான ரூ.100 கோடியை தமிழக அரசிற்கு புயல் நிவாரணமாக என்.எல்.சி. நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “திராவிடக் கட்சி தலைவர்கள் திரைப்பட வசனம் எழுதி, பேசி மக்களை மயக்கும் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சி பொறுப்பிற்கு வந்தார்கள். அவர்களின் ஆட்சியால் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.
விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம், மானிய விலையில் உரம் வழங்கினால் உழவர் வாழ்வு மறுமலர்ச்சி ஏற்படும். ஆனால் இதை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை என்று மருத்துவர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினா
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
போருக்கு சென்ற இளைஞர்கள் பார்-க்கு செல்கிறார்கள்: ராமதாஸ் ஆதங்கம்